திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி பட்டியல் அறிவிப்பு


திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி பட்டியல் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 March 2021 3:01 PM GMT (Updated: 11 March 2021 3:01 PM GMT)

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் தொகுதி பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் சார்பில் முக்கியக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தொடர்ந்து பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

இதன்படி தி.மு.க தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதி தமிழர் பேரவை உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதில் திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த 6 தொகுதிகளை இறுதி செய்வது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டு தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதையடுத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 தொகுதிகள் குறித்த பட்டியலை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டார். அதன்படி வானூர்(தனி), காட்டுமன்னார்கோவில்(தனி), செய்யூர்(தனி), அரக்கோணம்(தனி), நாகை(பொது), திருப்போரூர்(பொது) ஆகிய தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Next Story