20 தொகுதிகள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வினரின் உயர்மட்ட குழு ஆலோசனை


20 தொகுதிகள் ஒதுக்கீடு: பா.ஜ.க.வினரின் உயர்மட்ட குழு ஆலோசனை
x
தினத்தந்தி 11 March 2021 11:07 PM GMT (Updated: 11 March 2021 11:07 PM GMT)

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் உயர்மட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பா.ஜ.க.வின் உயர்மட்ட குழுவினரின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். தமிழக பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளரும், மத்திய இணை மந்திரியுமான கிஷன்ரெட்டி, சி.டி.ரவி. தேர்தல் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எல்.கணேசன், முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், பா.ஜ.க. விரும்பிய 20 தொகுதிகளை அ.தி.மு.க. கூட்டணி ஒதுக்கி உள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தேசிய தலைமை விரைவில் வெளியிட இருக்கிறது. இதில் யாரை அறிவித்தாலும் அவர்களை வெற்றி பெற வைப்பதற்காக பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அத்துடன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கும் உழைக்க வேண்டும். அதேபோல் மக்கள் அளித்த தேவையின் அடிப்படையில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரித்து இறுதி செய்யும் நிலையில் இருப்பதால் ஓரிரு நாட்களில் அவற்றை வெளி கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தில் பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கேசவ விநாயகம், கே.டி.ராகவன், அகில இந்திய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட உயர் மட்ட குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

Next Story