தேர்தல் அறிக்கை குறித்து சென்னையில் இன்று நிர்மலா சீதாராமன் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு
தேர்தல் அறிக்கை குறித்து சென்னையில் இன்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளார். மேலும் பா.ஜ.க. பிரசார வாகனங்களையும் தொடங்கி வைக்கிறார்.
சென்னை,
சென்னை கோயம்பேட்டில் உள்ள பா.ஜ.க. தேர்தல் அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலை ஒட்டி பா.ஜ.க. சார்பில் பொதுமக்களுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியை வெற்றிபெறச் செய்ய வேண்டும். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வரக் கூடாது. அதற்காக வீடு வீடாகச் சென்று பா.ஜ.க. தொண்டர்கள் வாக்குச் சேகரிக்க வேண்டும்.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் இருந்தால்தான் தமிழகத்துக்குப் பல திட்டங்கள் கிடைக்கும். மேற்கு வங்காளத்தில் மத்திய அரசின் பல திட்டங்களை அங்கு முதல்-மந்திரியாக இருக்கும் மம்தா பானர்ஜி தடுத்து வருகிறார். இங்கும் அதே நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது.
தேர்தல் வாக்குறுதி
தமிழகத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டது. தற்போது அந்த நிலைமை மாறி அ.தி.மு.க. ஆட்சியில் மின்வினியோகமும், சட்ட ஒழுங்கும் நன்றாக உள்ளன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின்வெட்டு, நிலஅபகரிப்பு, கட்டபஞ்சாயத்து ஆகியவை மீண்டும் நடக்கும்
தி.மு.க. அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலில், வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளது. இளைஞர்கள், புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதுவரை தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதில்லை. ஆனால் அ.தி.மு.க. நிறைவேற்றி உள்ளது. உதரணமாக பொங்கல் பரிசை கூறலாம். எனவே குடும்பத் தலைவிகளுக்கு அ.தி.மு.க. நிச்சயம் ரூ.1,500 வழங்கும்.
கருத்துக்கேட்பு கூட்டம்
சென்னை தியாகராயநகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நாளை (இன்று) மதியம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, பா.ஜ.க. பிரசார வாகனங்களை நிர்மலா சீதாராமன் கொடியசைத்து தொடங்கி வைப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story