கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி


கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 13 March 2021 8:47 AM GMT (Updated: 13 March 2021 8:47 AM GMT)

கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 8 பேர் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணி குறித்தும், பிரசாரம் செய்வது குறித்தும் விளக்கமாக முதலமைச்சர் எடுத்துரைத்தார்.

பின்னர் சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் தனித்தனியாக தேர்தல் பிரசாரம் குறித்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.

இந்நிலையில் கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, “கூட்டணி விவகாரத்தில் தேமுதிக பக்குவத்துடன் செயல்படவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தகுதி, வாக்குவங்கி இருக்கிறது. அதற்கேற்றவாறு தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும். கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்த பின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்” என்று அவர் தெரிவித்தார். 

Next Story