தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


தமிழக சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 13 March 2021 6:08 PM GMT (Updated: 13 March 2021 6:08 PM GMT)

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25-சட்டமன்ற தொகுதிகளும் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் கட்டமாக  21 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 
 • பொன்னேரி- துரை சந்திரசேகர்,
 • ஸ்ரீபெரும்பதூர்- கே செல்வபெருந்தகை
 • சோளிங்கர்-   முனிரத்தினம்
 • ஊத்தங்கரை- ஆறுமுகம்
 • கள்ளக்குறிச்சி- மணிரத்தினம்
 • ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்
 • ஈரோடு (கிழக்கு)- திருமகன் ஈவெரா
 • உதகமண்டலம்- ஆர்.கனேஷ்
 • கோயம்புத்தூர் (தெற்கு) : மயூரா எஸ் ஜெயக்குமார்
 • உடுமலைப்பேட்டை- தென்னரசு
 • விருதாசலம்- ராதாகிருஷ்ணன்
 • அறந்தாங்கி-ராமச்சந்திரன்
 • காரைக்குடி- மங்குடி
 • மேலூர்- ரவிசந்திரன்
 • ஸ்ரீவல்லிபுத்தூர்- மாதவ ராவ்
 • சிவகாசி- அசோகன்
 • திருவாடனை- கருமாணிக்கம்
 • ஸ்ரீவைகுண்டம்-ஊர்வசி அமிர்தராஜ்
 • தென்காசி - பழனி
 • நாங்குநேரி- ரூபி மனோகரன்
 • கிள்ளியூர்- ராஜேஷ்குமார்
 • கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தல் - விஜய் வசந்த்


Next Story