இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
x
தினத்தந்தி 14 March 2021 10:21 AM GMT (Updated: 14 March 2021 10:21 AM GMT)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியீட்டுள்ளார்

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டத்தையடுத்து, ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரசாரம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் உச்சபட்ச பரபரப்பில் உள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3, மனிதநேய மக்கள் கட்சி - 2, விடுதலை சிறுத்தைகள் - 6, இந்திய கம்யூனிஸ்ட் - 6, மதிமுக - 6, காங்கிரஸ் - 25 ஆகிய தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருத்துறைபூண்டி, தளி, திருப்பூர் வடக்கு, பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த 6 தொகுதிகளுக்கும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியீட்டுள்ளார்

அதன் விவரம் வருமாறு:-

1. திருத்துறைபூண்டி - மாரிமுத்து

2. தளி - ராமச்சந்திரன்

3. திருப்பூர் வடக்கு - ரவி (எ) சுப்பிரமணியன்

4. பவானிசாகர் - சுந்தரம்

5. வால்பாறை - ஆறுமுகம்

6. சிவகங்கை - குணசேகரன்

Next Story