பாஜக இந்த முறை இரட்டை இலக்கில் வெற்றி பெறுவது உறுதி - பாஜக மாநில தலைவர் எல்.முருகன்
பாஜக இந்த முறை இரட்டை இலக்கில் வெற்றி பெறுவது உறுதி என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் தேதி நெருங்கி வருவதால் பிரசாரம், தொகுதி பங்கீடு, கூட்டணி, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், 6 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக தேசியத் தேர்தல் குழு இன்று வெளியிட்டுள்ளது. பாஜக வெளியிட்டுள்ள முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு;-
ஆயிரம் விளக்கு- குஷ்பு
கோவை தெற்கு - வானதி சீனிவாசன்
நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி
தாராபுரம்- எல்.முருகன்
அரவக்குறிச்சி- அண்ணாமலை
காரைக்குடி - எச்.ராஜா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
பாஜக இந்த முறை இரட்டை இலக்கில் வெற்றி பெறுவது உறுதி. விரைவில் 3 வேட்பாளர்கள் அறிவிக்கப்படும். டாக்டர் சரவணனுக்கு எதிராக தொண்டர்கள் போராட்டம் செய்ய மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story