நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை - தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு


நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை -  தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
தினத்தந்தி 16 March 2021 12:44 PM IST (Updated: 16 March 2021 12:44 PM IST)
t-max-icont-min-icon

தமிழக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 25 தொகுதிகளில் மொத்தம் 21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. எஞ்சிய 4 தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக
விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார்.

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்,

*புதிய அரசு அமைந்ததும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை

*கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க நடவடிக்கை

*மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்துவோம்

*விவசாயிகளை பாதுகாக்க புதிய சட்டங்கள் இயற்றப்படும்

*நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வி ஒதுக்கீடு 10%ஆக உயர்த்தப்படும்

*ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம்

*உள்ளாட்சிகளுக்கு மீண்டும் அதிகாரம் வழங்க நடவடிக்கை

*புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரி விலக்கு

*சட்டமன்ற மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி செய்வோம்

* இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட திருக்கோவில்களில், ஆகம விதிக்குட்பட்டு அர்ச்சகராகப்பாடசாலைகளில் பயின்று தேர்ச்சி பெற்ற இந்து மதத்தை சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பணிபுரியும் விதத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story