புதுச்சேரியில் அதிமுக சார்பாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு
புதுச்சேரியில் அதிமுக சார்பாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 30 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள புதுச்சேரியைப் பொறுத்தவரையில், காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. மறுபுறம் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில், பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
புதுச்சேரியில் காங்கிரஸ் 15 தொகுதிகளிலும், தி.மு.க 13 தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. அதேபோல, என்.ஆர்.காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பா.ஜ.க 9 தொகுதிகளிலும், அ.தி.மு.க 5 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுக சார்பாக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி உப்பளம் தொகுதியில் அன்பழகன், உருளையன்பேட்டை தொகுதியில் ஓம் சக்திசேகர், முத்தியால்பேட்டை தொகுதியில் வையாபுரி மணிகண்டன், முதலியார்பேட்டை தொகுதியில் பாஸ்கர், காரைக்கால் தெற்கு தொகுதியில் அசனா ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story