ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு


ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு
x
தினத்தந்தி 16 March 2021 9:46 PM GMT (Updated: 16 March 2021 9:46 PM GMT)

ஒட்டன்சத்திரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மாற்றம் விஜயகாந்த் அறிவிப்பு.

சென்னை, 

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடைபெற உள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த பா.மாதவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எம்.சிவக்குமார் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவருக்கு தே.மு.தி.க. நிர்வாகிகளும், தொண்டர்களும், அ.ம.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பணியில் முழுமையாக ஈடுபட்டு பொதுமக்களின் பேராதரவை திரட்டி தே.மு.தி.க. வேட்பாளரை வெற்றிபெற செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story