ஆத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மாற்றம்


ஆத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மாற்றம்
x
தினத்தந்தி 17 March 2021 3:25 AM IST (Updated: 17 March 2021 3:25 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் மாற்றம் ஜீவா ஸ்டாலினுக்கு பதில், சின்னதுரை போட்டியிடுவதாக அறிவிப்பு.

சென்னை, 

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களுடைய கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. தி.மு.க. சார்பில் போட்டியிடும் 173 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில் அந்த வேட்பாளர் பட்டியலில் இருந்த ஒரு வேட்பாளரை மாற்றி இருப்பதாக தி.மு.க. தலைமைக் கழகம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் (தனி) தொகுதியில், தி.மு.க. சார்பாக போட்டியிட, ஏற்கனவே ஜீவா ஸ்டாலினின் பெயர் அறிவிக்கப்பட்டு இருந்ததற்கு மாறாக, தற்போது கு.சின்னதுரை ஆத்தூர் (தனி) தொகுதி தி.மு.க. வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story