குறைந்தபட்ச அடிப்படை வருமானம்: மாணவர்களுக்கு 10 லட்ச ரூபாய்க்கான கடன் அட்டை - மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கை
குறைந்தபட்ச அடிப்படை வருமானம் மற்றும் மாணவர்களுக்கு 10 லட்ச ரூபாய்கான கடன் அட்டை வழங்கப்படும் என்று மம்தா பானர்ஜி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா,
294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காள சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்காள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி வெளியிட்டார். மேலும்
மேற்கு வங்காளத்தின் வளர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுவேன் என்று கூறிய மம்தா பானர்ஜி, தேர்தல் அறிக்கை தொடர்பாக பேசுகையில், “மாநில அரசு, கணவனை இழந்த பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மற்றும் சிறப்பு திறன் கொண்டவர்களுக்கு பண உதவி மூலம் உதவியுள்ளது. இதன் தொடர்ச்சியாக, வங்காளத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இப்போது குறைந்தபட்ச அடிப்படை வருமானம் வழங்கப்படும்.
இதன் கீழ், 1.6 கோடி தகுதி வாய்ந்த பொது வகை குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ .500 ரொக்க பரிமாற்றம் கிடைக்கும், இது ஆண்டுக்கு ரூ .6,000 ஆகும். ஒவ்வொரு எஸ்சி / எஸ்டி வகை குடும்பத்திற்கும் மாதந்தோறும் ரூ .1,000 ரொக்கம் கிடைக்கும், இது ஆண்டுக்கு ரூ .12,000 ஆகும்.
மாநிலத்தில் வேலையின்மை விகிதத்தை பாதியாக குறைக்க ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக இந்த அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு வேலைவாய்ப்பு பெறுவதற்காக ஆண்டுதோறும் கூடுதலாக 10 லட்சம் எம்.எஸ்.எம்.இ.க்கள் அமைக்கப்படும்.
மேலும் உயர் படிப்பைத் தொடர மாணவர்களுக்கு மாணவர்களுக்கு 4 சதவீத வட்டியில் 10 லட்ச ரூபாய்கான கடன் அட்டை வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு 731 நாட்கள் பேறுகால விடுமுறை அளிக்கப்படும். சிறுகுறு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். ஒன்றரை கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தேடி வந்து ரேசன் பொருட்கள் வழங்கப்படும். கேண்டீன்கள் மூலமாக 5 ரூபாய்க்கு சாப்பாடு வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் 24 மணிநேரமும் மின்சாரம் வழங்கப்படும்” என்று அவர் கூறினார்.
I humbly present my 10 ‘Ongikars’ to build a stronger & more prosperous Bengal so that the wheels of development keep moving forward in the third term of our government. The aim is just one, to sustain Bengal as one of the leading states in the country. (1/4) pic.twitter.com/K0xNtrt7GB
— Mamata Banerjee (@MamataOfficial) March 17, 2021
Related Tags :
Next Story