“எனக்கு பல இடங்களில் தடங்கல் ஏற்படுத்துகிறார்கள்” கமல்ஹாசன் குற்றச்சாட்டு
“எனக்கு பல இடங்களில் தடங்கல் ஏற்படுத்துகிறார்கள்” என்று கமல்ஹாசன் குற்றம்சாட்டினார்.
கோவை,
எங்கள் கட்சி பொருளாளர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகளின் சோதனை அரசியல் அழுத்தமாக கூட இருக்கலாம். இந்த சோதனை குறித்து முதலில் அவர்கள் பதில் அளிக்கட்டும். பின்னர் நான் கூறுகிறேன்.
எனக்கு ஹெலிகாப்டர் தேவையில்லை. நான் பஸ்சில் போய் கொண்டு இருந்தவன். என்னை ஹெலிகாப்டரில் போக வைத்தது மக்கள் தான். நான் அரசு பணத்தில் செல்லவில்லை. எனது பணத்தில்தான் செல்கிறேன். இதற்காக தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறேன்.
தடங்கல் ஏற்படுத்துகிறார்கள்
எனக்கு பல இடங்களில் தடங்கல் ஏற்படுத்துகிறார்கள். கடந்த 2- 3 ஆண்டாக இது தொடர்கிறது. கல்லூரி மாணவர்களை நான் சந்தித்து பேசக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தனர். எங்கள் கூட்டத்திற்கு சுலபமாக அனுமதி கிடைக்காது. இருப்பினும் நான் செல்ல வேண்டிய இடங்களுக்கு குறுகிய காலத்தில் செல்லத்தான் ஹெலிகாப்டர் பயன்படுத்துகிறேன்.
234 தொகுதியிலும் மக்களுக்கு தெரிந்த முகமாக நான் இருக்கிறேன். இதனால், பல இடங்களுக்கு செல்கிறேன். ஹெலிகாப்டருக்கான செலவு எனது தேர்தல் செலவின கணக்கில்தான் வரும்.
தேர்தல் அறிக்கை
எங்களது கட்சி தேர்தல் அறிக்கை விரைவில் வரும். நாங்கள் இரண்டு வருடங்களுக்கு முன் அளித்த அறிக்கையில் கூறி இருப்பதை தற்போது கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. இது போன்ற நல்ல விஷயம் மக்களுக்கு செல்ல முன்னோடியாக இருக்கிறோம். இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற எங்களின் திட்டத்தை மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். "கமல்ஹாசன் அறிவித்த திட்டத்தை பலரும் தேர்தல் அறிக்கையில் பயன்படுத்தி வருகிறார்கள்" என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சசிதரூர் கூறி இருக்கிறார். நாங்கள் பிறருக்கு முன் உதாரணமாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story