ஊர்ந்து சென்று பதவி வாங்க நான் என்ன பல்லியா? பாம்பா? - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி


ஊர்ந்து சென்று பதவி வாங்க நான் என்ன பல்லியா? பாம்பா?   - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  கேள்வி
x
தினத்தந்தி 19 March 2021 12:08 PM IST (Updated: 19 March 2021 12:08 PM IST)
t-max-icont-min-icon

ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி வாங்க தான் என்ன பாம்பா? பல்லியா? என என கேள்வி எழுப்பியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஊர்ந்து சென்றல்ல, நடந்து சென்றுதான் முதலமைச்சர் பதவியை ஏற்றதாக மு.க.ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடலூர்

கடலூர் மாவட்டம் புவனகிரியில், அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

 திமுக ஆட்சியில் இழந்த காவிரி உரிமையை மீட்டுக் கொடுத்தது அதிமுக அரசு .  நான் விவசாயி என்று கூறினால் ஸ்டாலினுக்கு ஏன் கோபம் வருகிறது.  எடப்பாடி விவசாயி, விவசாயி என குதிக்கிறார் என ஸ்டாலின் சொல்லுகிறார். நான் குதித்தால் உனக்கு என்ன? நான் இப்போதும் ஒரு விவசாயி தான். இப்போதும் விவசாயம் செய்து வருகிறேன்.விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்.

நாப்ஊர்ந்து போய் முதலமைச்சர் பதவி பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் விமர்சிக்கிறார். ஒரு முதலமைச்சரை எப்படி பேசவேண்டும் என்பது கூடத் தெரியாதவர்தான் ஸ்டாலின்.நான் ஊர்த்து போய் முதல்வராக பல்லியா? பாம்பா? நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். 

அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்படுவதால் தொழில் வளம் பெருகுகிறது.  விவசாய மோட்டார்களுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கி இந்திய திருநாட்டிற்கே தமிழகம் முன்மாதிரியாகத் திகழ்கிரது. அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கிய அரசு அதிமுக அரசு.  மாதந்தோறும் 6 சிலிண்டர்கள் இலவசம், ரேசன் அட்டைகளுக்கு 1500 ரூபாய் நிதியுதவி, இலவச வாஷிங்மெஷின் உள்ளிட்ட வாக்குறுதிகளைவழங்கி உள்ளோம் என கூறினார். 


Next Story