ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு - முதல்வர் பழனிசாமி பிரசாரம்
ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு என முதல்வர் பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6- ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஜெயங்கொண்டான் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே பாலுவை ஆதரித்து முதல் அமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: -
அதிமுக அரசை விமர்சனம் செய்வதே திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வாடிக்கையாக உள்ளது. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நனவாக்கியது அதிமுக அரசு. நகரத்தை போல கிராமங்களும் வளர்ச்சி பெற வேண்டும் என்பதே அதிமுக எண்ணம்” என்றார்.
Related Tags :
Next Story