அரசியல் கட்சிகளுக்காக கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை - கல்வித்துறை எச்சரிக்கை
அரசியல் கட்சிகளுக்காக கல்வித்துறை பணியாளர்கள் வாக்கு சேகரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் சட்டசபை தேர்தலில் கல்வித்துறையில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் முதல் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் மத்திய அரசின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு பணியாற்ற கடமைப்பட்டவர்கள்.
சமூக ஊடகங்கள், சங்கங்கள் வாயிலாக அரசியல் கட்சிகளை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்கு சேகரிப்பு மற்றும் விமர்சனங்கள் உள்ளிட்ட செயல்களில் அரசு ஊழியர்கள் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது.
கல்வித்துறை பணியாளர்கள் எந்த விதத்திலும் அரசியல் கட்சி சார்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது, தபால் வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story