கேரள சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது கேரள காங்கிரஸ்


கேரள சட்டமன்ற தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது கேரள காங்கிரஸ்
x
தினத்தந்தி 20 March 2021 5:14 PM IST (Updated: 20 March 2021 5:14 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவில் 140 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்துக்கு தேர்தலுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் 140 உறுப்பினர்களைக் கொண்ட  சட்டமன்றத்துக்கு தேர்தலுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது. இதனால், அனைத்துக் கட்சிகளும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், கேரளத்தில் எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ்  இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

இதில்  சுகாதாரத் திட்டம், வீடற்றோருக்கான வீட்டு வசதித் திட்டம், 5 கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கப்படும். அரசு வேலைகளுக்கு  போட்டித்தேர்வுகள் எழுதும் தாய்மார்களுக்கு இரண்டு ஆண்டுகள் வயது வரம்பு சலுகை வழங்கப்படும்” போன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Next Story