தொகுதி கண்ணோட்டம்: ஸ்ரீரங்கம்
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரிய அரங்கன் பள்ளி கொள்ளும் ரெங்கநாதர் கோவில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி ஆன்மிக தலத்தில் மட்டும் இன்றி அரசியல் களத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இதற்கு காரணம் மிகவும் பழமை வாய்ந்த இந்த தொகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி வாகை சூடி முதல் அமைச்சராக பதவி ஏற்றது தான். ஜெயலலிதாவை தேர்ந்தெடுத்து மலைக்கோட்டை மாநகரில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு முதல் -அமைச்சராக அனுப்பி வைத்தன் மூலம் இத்தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றது.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 10 ஆயிரத்து 739. திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிக வாக்காளர் எண்ணிக்கையை கொண்டது இத்தொகுதி தான். திருச்சி மாநகராட்சி பகுதியில் 1 முதல் 6 வார்டுகள் இந்த தொகுதியில் அடக்கம். இது தவிர மணிகண்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியங்கள், சிறுகமணி பேரூராட்சி, மணப்பாறை ஒன்றியத்தில் மொண்டிப்பட்டி உள்பட 7 ஊராட்சிகள் ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ளன. நகர பகுதிகளை விட கிராமங்களே அதிக அளவில் உள்ளன.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது ஸ்ரீரங்கம் தனி வருவாய் கோட்டமாக உ்ருவாக்கப்பட்டது. அதற்கு தனி கட்டிடம் கட்டப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசிக்காக யாத்ரி நிவாஸ், தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறையில் தமிழ்நாடு செய்தி தாள் நிறுவனம் சார்பில் காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை,
சேதுராப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, தேசிய சட்டப்பல்கலைக்கழகம், மகளி்ர் தோட்டக்கலை கல்லூரி என திருச்சி மாவட்டமே நினைத்து கூட பார்க்க முடியாத அளவில் ஏராளமான வளர்ச்சி தி்ட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அது மட்டும் இன்றி கிராமப்புறங்களில் சாலை மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் தாராளமாக செய்து கொடுக்கப்பட்டன.
கடந்த தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ். வளர்மதி, தி.மு.க. வேட்பாளர் பழனியாண்டியை விட சுமார் 14 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்து தமிழக பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்த தொகுதியை பொறுத்தவரை முத்தரையர் இன மக்களும், அதற்கு அடுத்த படியாக தாழ்த்தப்பட்டோர் இன மக்களும் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் தவிர பிராமணர்கள், யாதவர்கள், நாயுடு, செட்டியார், வன்னியர், நாடார், வெள்ளாளர், கவுண்டர் இன மக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளனர்.
கிராமங்கள் அதிக அளவில் உள்ளதால் விவசாயம் தான் தொகுதி மக்களின் பிரதான தொழில். உய்யகொண்டான், கட்டளை உள்ளிட்ட காவிரியின் கிளை வாய்க்கால்கள் இந்த தொகுதியின் பல கிராமங்கள் வழியாக செல்வதால் தண்ணீ்ர் பிரச்சினைக்கு வேலை இல்லை. இதன் காரணமாக நெல், வாழை, வெற்றிலை, கரும்பு பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட மலர் சாகுபடியும் விவசாயிகளின் முக்கிய தொழிலாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மற்றும் பருவ மழை பொய்த்து விட்டால் வறட்சி தாண்டவமாடி விடும் நிலை தான் உள்ளது. மற்றபடி காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலைைய விட்டால் வேறு தொழில்கள் இல்லை.
திருச்சி காந்தி மார்க்கெட் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்காக ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குடியில் ஜெயலலிதாவால் அடிக்கல் நட்டப்பட்டு ரூ.87 கோடியில் கட்டப்பட்டு, அவரது மறைவுக்கு பின்னர் திறக்கப்பட்டது. இந்த மார்க்கெட் திறப்பு விழா கண்டும் முழு அளவில் பயன்பாடு இல்லாமல் உள்ளது.
இனி ஸ்ரீரங்கம் தொகுதி மக்கள் என்ன சொல்கிறார்கள் என பார்ப்போம்.
இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் கடந்த 1952-ம் ஆண்டு முதல் இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு:-
1952- கம்யூ. வெற்றி
சிற்றம்பலம்(கம்யூ.) 25,343
சீனிவாசன்(காங்.) 17,364
1957- காங். வெற்றி
வாசுதேவன்(காங்.) 2,756
சிற்றம்பலம்(சுயே) 6,847
1962-காங். வெற்றி
சுப்பிரமணிய செட்டியார்(காங்.) 39,101
துரைசாமி(தி.மு.க.) 24,651
1967- காங். வெற்றி
எஸ்.ராமலிங்கம்(காங்.) 34,474
எம்.அருணா(தி.மு.க) 33,356
1971- ப.காங். வெற்றி
ஜோதி வெங்டாசலம்(ப.காங்.) 36,172
காமாட்சி(தி.மு.க) 33,239
1977-அ.தி.மு.க. வெற்றி
ஆர்.சவுந்தரராஜன்(அ.தி.மு.க.) 26,200
பேரூர் தர்மலிங்கம்(தி.மு.க.) 21,135
1980-அ.தி.மு.க. வெற்றி
ஆர்.சவுந்தரராஜன்(அ.தி.மு.க) 49,160
வி.சாமிநாதன்(காங்.) 42,761
1984- அ.தி.மு.க. வெற்றி
ஆர். சவுந்தரராஜன்(அ.தி.மு.க) 58,861
ஆர். பெருமாள்(காங்.) 34,909
1989- ஜனதா தளம் வெற்றி
வெங்கடேஸ்வர தீட்சிதர்(ஜனதா தளம் 42,629
கு.ப.கிருஷ்ணன்(அ.தி.மு.க.ஜெ.) 4,621
1991- அ.தி.மு.க. வெற்றி
கு.ப.கிருஷ்ணன்(அ.தி.மு.க.) 82,462
காட்டூர் ஜெயபாலன்(ஜனதா.) 30,918
1996- தி.மு.க. வெற்றி
தி.ப.மாயவன்(தி.மு.க.) 73,371
மு.பரஞ்சோதி(அ.தி.மு.க.)43,512
2001- அ.தி.மு.க. வெற்றி
கே.கே.பாலசுப்பிரமணியன்(அ.தி.மு.க) 72,993
எம். சவுந்திரபாண்டியன்(பா.ஜ.க.) 60,317
2006-அ.தி.மு.க. வெற்றி
மு.பரஞ்சோதி(அ.தி.மு.க.) 89,135
ஜெரோம் ஆரோக்கியராஜ் (காங்.) 78,213
2011-அ.தி.மு.க. வெற்றி
ஜெ.ஜெயலலிதா(அ.தி.மு.க.) 1,05,328
என்.ஆனந்த்(தி.மு.க.) 63,480
2015- இடைத்தேர்தல்-அ.தி.மு.க. வெற்றி
எஸ்.வளர்மதி(அ.தி.மு.க.) 1,51,561
என்.ஆனந்த்(தி.மு.க.) 5,045
2016 அ.தி.மு.க. வெற்றி
எஸ்.வளர்மதி (அ.தி.மு.க) 1,08,400
எம். பழனியாண்டி (தி.மு.க) 93,991
பயோடேட்டா
ஆண் வாக்காளர்கள் - 1,50,036
பெண் வாக்காளர்கள் - 1,60,676
மூன்றாம் பாலினம் - 27
மொத்த வாக்காளர்கள் - 3.10,739
Related Tags :
Next Story