"எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் மக்களுடன் நிற்கும் ஸ்டாலின் நான்" - மு.க. ஸ்டாலின் பிரசாரம்
"எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் மக்களுடன் நிற்கும் ஸ்டாலின் நான் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திமுக, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே வேட்பாளர். எல்லா காலங்களிலும் எல்லா நேரங்களிலும் மக்களுடன் நிற்கும் ஸ்டாலின் நான். 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு பல்வேறு மக்கள் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறேன்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்களில் 13 பேரை சுட்டுக்கொன்றனர்.
திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் தான் தூத்துக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதிமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் சொல்லி பழனிசாமியால் வாக்கு சேகரிக்க முடியுமா? மே 2ல் தேர்தல் முடிவு வெளியாகி நாங்கள் பதவியேற்றதும் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை-மகன் கொல்லப்பட்ட சம்பவமுமே எடுத்துக் காட்டு.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story