வரும் 30-ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கிறது.
சென்னை,
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக வரும் 30 ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.
அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தாராபுரத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார். ஏப். 2ஆம் தேதி மதுரை, நாகர்கோவிலில் பிரதமர் மோடி வாக்குசேகரிக்க உள்ளார்வரும் 26ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story