தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் துணை ராணுவப் படை விரைவில் வருகை


தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு கூடுதல் துணை ராணுவப் படை விரைவில் வருகை
x
தினத்தந்தி 23 March 2021 7:21 AM GMT (Updated: 23 March 2021 7:21 AM GMT)

தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 235 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை தர உள்ளன.

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக தேர்தல் பாதுகாப்பு பணிக்கு 235 கம்பெனி துணை ராணுவப் படை விரைவில் வருகை தர உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, 65 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story