தொகுதி கண்ணோட்டம்: ஆலங்குடி


தொகுதி கண்ணோட்டம்: ஆலங்குடி
x
தினத்தந்தி 23 March 2021 10:37 AM GMT (Updated: 23 March 2021 10:37 AM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைசி பகுதியில் உள்ளது ஆலங்குடி தொகுதி. விவசாயம் நிறைந்த தொகுதியாக மட்டுமே உள்ளது.

இத்தொகுதியில் பல சிறப்புமிக்க இடங்கள் காணப்படுகிறது. கீரமங்கலம் ஆயிரமாண்டு பழமையான சிவாலயத்தின் முன்னால் 84 அடி உயரம் கொண்ட சிவன் சிலை, ஆசியாவிலேயே உயரமான குதிரை சிலை கொண்ட குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில், சேந்தன்குடி நகரம் பாலசுப்பிரமணியர் கோவில், கீழாத்தூர், ஆலங்குடி நாடியம்மன் கோவில்கள், திருவரங்குளம் அரங்குளநாதர் போன்ற பல கோவில்களும் உள்ளன. மா, பலா, வாழை என முக்கனிகள் உள்ளிட்ட பல வகை கனிகளும், மல்லிகை, முல்லை, கனகாம்பரம், காட்டுமல்லி, சம்பங்கி, ரோஜா, அரளி, வாடாமல்லி, சென்டி, செவந்தி என மலர்களையும், காய்கறி வகைகளையும் விளைவிக்கும் செழித்த பூமியாகவும் உள்ளது.

இத்தொகுதியில் முத்தரையர் சமூக மக்கள் பெரும்பான்மையாகவும், அடுத்தபடியாக முக்குலத்தோர், இஸ்லாமியர்கள், தலித், யாதவர், உடையார், நகரத்தார்கள் உள்ளிட்ட பல சமூகத்தினர் உள்ளனர். 

இத்தொகுதியில், திருவரங்குளம் ஒன்றியத்தில் 48 ஊராட்சிகளும், ஆலங்குடி, கீரமங்கலம் ஆகிய 2 பேரூராட்சிகளும், அறந்தாங்கி 32 ஊராட்சிகளும் இணைந்துள்ளன.

இத்தொகுதியில் 1962-க்கு பிறகு நடைபெற்ற 12 சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா ஒரு முறையும், சுயேச்சை ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த முறை தி.மு.க. வேட்பாளர் மெய்யநாதன் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.நடைபெற உள்ள 2021 தேர்தலில் அ.தி.மு.க.சார்பில் தர்ம.தங்கவேல், தி.மு.க.சார்பில் மெய்யநாதன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள். அ.ம.மு.க.சார்பில் விடங்கர், நாம்தமிழர் கட்சி சார்பில் திருச்செல்வம், மக்கள் நீதிமய்யம் சார்பில் வைரவன் மற்றும் சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

இதுவரை நடந்த தேர்தல் முடிவுகள்

1962- தி.மு.க. வெற்றி

முருகையன் (தி.மு.க.) 31,438

மங்கப்பன் (காங்.) 18,472

1967- தி.மு.க. வெற்றி

கே.வி.சுப்பையா (தி.மு.க.) 32,984

டி.ஏ.எஸ்.தங்கவேல் (காங்.) 32,148

1971 - தி.மு.க. வெற்றி

கே.வி.சுப்பையா (தி.மு.க.) 43,279

டி.ஏ.எஸ்.தங்கவேல் (காங். ஓ) 35,397

1977- காங்கிரஸ் வெற்றி

டி.புஷ்பராஜ் (காங்.) 37,634

பி.திருமாறன் (அ.தி.மு.க.) 27,059

1980 - அ.தி.மு.க. வெற்றி

பி.திருமாறன் (அ.தி.மு.க.) 56,206

டி.புஷ்பராஜ் (காங்) 44,605

1984 - அ.தி.மு.க.வெற்றி

ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) 74,202

ஏ.பெரியண்ணன் (தி.மு.க.) 37,173

1989 - தி.மு.க.வெற்றி

கே.சந்திரசேகரன் (தி.மு.க.) 37,361

டி.புஷ்பராஜ் (காங்.) 33,141

1991 - அ.தி.மு.க.வெற்றி

எஸ்.சண்முகநாதன் (அ.தி.மு.க.) 88,684

எஸ்.சிற்றரசு (தி.மு.க.) 38,983

1996 - சுேயச்சை வெற்றி

ஏ.வெங்கடாசலம் (சுயேச்சை) 35,345

எஸ்.ராஜசேகரன் (கம்யூ.) 34,693

2001 - அ.தி.மு.க.வெற்றி

ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) 59,631

எஸ்.ஏ.சூசைராஜ் (தி.மு.க.) 42,900

2006 - இ.கம்யூ. வெற்றி

எஸ்.ராஜசேகரன் (இ.கம்யூ) 60,122

ஏ.வெங்கடாசலம் (அ.தி.மு.க.) 50,971

2011 - அ.தி.மு.க. வெற்றி

கு.ப. கிருஷ்ணன் (அ.தி.மு.க.) 57,250

எஸ். அருள்மணி (பா.ம.க.) 52,123

2016 - தி.மு.க. வெற்றி

சிவ.வீ. மெய்யநாதன் (தி.மு.க. ) 72,992

ஞான.கலைச்செல்வன் (அ.தி.மு.க.) 63,051

பயோடேட்டா

மொத்த வாக்காளர்கள் - 2,16,930

ஆண்கள் -1,06,955

பெண்கள் -1,09,971

மூன்றாம் பாலினம் - 4


Next Story