நடிகை குஷ்பு மீது திருமாவளவன் விமர்சனம் ‘சினிமாவில் மவுசு போனதால் தேர்தலில் போட்டியிடுகிறார்’
சினிமாவில் மவுசு போனதால்தான் நடிகை குஷ்பு தேர்தலில் போட்டியிடுகிறார் என்று தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னை,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஆதரவாகவும் நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.
சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
ஜெயலலிதா உயிரோடு இருந்த போது மோடியா? இந்த லேடியா? என்று சவால் விட்டார். ஆனால் இன்று அ.தி.மு.க.வில் உள்ள எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அவரிடம் கூனி குறுகி போய் உள்ளனர்.
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் தமிழகத்தில் காலூன்ற பா.ஜ.க. முயற்சிக்கிறது. பா.ஜ.க.வை வீழ்த்தத்தான் தி.மு.க. கூட்டணி உருவாகி உள்ளது. எனவே பா.ஜ.க.வால் ஒரு போதும் தமிழகத்தில் காலூன்ற முடியாது.
நடிகை குஷ்பு மீது விமர்சனம்
தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களை அக்கட்சி பலிகடாவாக்கி உள்ளது. போட்டியிடும் 20 தொகுதியில் ஒன்றில் கூட பா.ஜ.க.வால் வெற்றி பெற முடியாது. சினிமாவில் மவுசு போனதால்தான், நடிகை குஷ்பு வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story