மீண்டும் விவசாயி ஆட்சிக்கு வர வாக்களியுங்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம்
மீண்டும் விவசாயி ஆட்சிக்கு வர வாக்களியுங்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
சென்னை,
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் குமாரப்பாளையத்தில் அமைச்சர் தங்கமணியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
விவசாயி முதல்-அமைச்சர்
இந்த தேர்தல் நமக்கு முக்கியமான தேர்தல், முன்பிருந்த ஆட்சி அல்லாமல் ஒரு விவசாயி ஆட்சி அமைப்பது அதாவது நாம் எல்லாம் விவசாய குடும்பத்தில் பிறந்தோம், நம்மில் ஒருவர் தமிழகத்தின் முதல்-அமைச்சராக இந்த தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த தேர்தல் விவசாயிக்கும், ஒரு அரசியல் வியாபாரிக்கும் நடக்கும் தேர்தல். இதில் யார் வெற்றி பெற வேண்டும்? நிச்சயமாக விவசாயிதான் வெற்றி பெற வேண்டும். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகம். தி.மு.க. ஆட்சியில் அப்படி அல்ல, பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை, இந்த கட்சியில் பெண்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரலாம்.
தி.மு.க.வில் மு.க.ஸ்டாலின் கட்சி வேட்பாளர்களையும், கட்சி உறுப்பினர்களையும், கட்சி தொண்டர்களையும் நம்பாமல் இவரை மட்டுமே நம்புகிறார். ஆனால் நாங்கள் அப்படி அல்ல, உங்களை மட்டுமே நம்புகிறோம். அதாவது மக்களாகிய உங்களை மட்டுமே நம்புகிறோம். மீண்டும் ஒரு விவசாயி ஆட்சிக்கு வந்து 70 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு விவசாயி முதல்-அமைச்சராக வேண்டும் என்பதே நமது நோக்கம்.
தங்கமணிக்காக இந்த அன்புமணி
இப்போது கோடை காலம் நெருங்கி கொண்டிருக்கிறது. நீர் பற்றாக்குறை என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு துணி துவைப்பதன் மூலமாக 100 லிட்டர் தண்ணீரை வீணடிக்கிறோம், ஆனால் வாஷிங்மெஷின் உபயோகித்தால் 10 லிட்டர் தண்ணீர் மட்டுமே உபயோகமாகும். இதன் மூலமாக 90 லிட்டர் தண்ணீர் மிச்சமாகும். அப்படி பார்க்கும் போது 32,700 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படும். இப்படி அறிவியல் ரீதியாக மக்களின் முன்னேற்றத்திற்காக அறிவியல் சார்ந்த கருத்துகளை யோசித்து மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி உள்ளார் நமது முதல்-அமைச்சர். ஆனால் தி.மு.க. அப்படி அல்ல. அதனால் தான் கூறுகிறேன் தங்கமணி அவர்களுக்கு வாக்களியுங்கள். அதனால் தான் இன்று தங்கமணிக்காக இந்த அன்புமணி வந்துள்ளேன்.
காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் மேய்ந்ததுபோல, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை மேய்ந்து விடுவது உறுதி. அதனால் யோசியுங்கள், அமைதியான நல்லாட்சி தொடர வாய்ப்பு அளியுங்கள். பெண்களுக்கு, தொழிலாளிகளுக்கு, விவசாயிகளுக்கு, குழந்தைகளுக்கு, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு இப்படி அனைவருக்கும் நல்லதை அள்ளித்தரும், இப்படி அனைவரின் நன்மைக்காக சேவை செய்ய காத்திருக்கும் ஒரே கூட்டணி வெற்றி கூட்டணி அ.தி.மு.க. தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி யோசித்து வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story