சட்டசபை தேர்தல்: போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்


சட்டசபை தேர்தல்: போடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
x
தினத்தந்தி 28 March 2021 3:55 PM IST (Updated: 28 March 2021 3:55 PM IST)
t-max-icont-min-icon

போடி தொகுதியில் பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அதிமுக, திமுக, அமமுக வேட்பாளர்களிடையே தான் கடும் போட்டி நிலவுகிறது.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலில் போடி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார். அ.ம.மு.க. சார்பில் முத்துச்சாமி போட்டியிடுகிறார். இவர்கள் 3 பேருமே அ.தி.மு.க.வில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள். தற்போது எதிர் எதிர் துருவங்களில் களத்தில் உள்ளனர்.

மநீம சார்பில் கனேஷ்குமார் போட்டியிடுகிறர். நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம் சந்தர் போட்டியிடுகிறார்.

முத்துச்சாமி 1982-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் கிளைச்செயலாளராகவும், சின்னமனூர் ஒன்றிய செயலாளராகவும், வேளாண்மை விற்பனைக் குழு தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.ம.மு.க.வில் இணைந்த முத்துச்சாமி அக்கட்சியில் சின்னமனூர் ஒன்றிய செயலாளராகவும், தற்போது தேனி தெற்கு மாவட்ட செயலாளராகவும் உள்ளார்.

போடி தொகுதியில் பல்வேறு கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டாலும் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்களிடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. இவர்கள் 3 பேருமே 40 ஆண்டுகளாக அ.தி.மு.க.வில் ஒரே அணியில் இருந்து பணியாற்றியவர்கள். தற்போது எதிர் எதிர் அணியில் களம் கண்டு தேர்தலை சந்திப்பது வாக்காளர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை வீழ்த்துவதே லட்சியம் என்று தி.மு.க. வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

Next Story