சட்டசபை தேர்தலில் சிங்கம்போல் தனியாக நிற்கிறோம், ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் சீமான் பேச்சு


சட்டசபை தேர்தலில் சிங்கம்போல் தனியாக நிற்கிறோம், ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் சீமான் பேச்சு
x
தினத்தந்தி 29 March 2021 4:25 AM IST (Updated: 29 March 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் சிங்கம்போல் தனியாக நிற்கிறோம், ஒருமுறை வாய்ப்பு தாருங்கள் என்று சீமான் பேசினார்.

கடலூா், 

கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தன்னல வாதிகளின் கையில் நாடும், அதிகாரமும் சிக்கிக்கொண்டதால்தான் தன்மானத்தை இழந்து நிற்கிறது. அடிமைத்தனமான, கேடுகெட்ட பண நாயகத்தை அழித்து புதிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும். மக்களின் குறைகளை கேட்க நாங்கள் வரவில்லை. குறைகளை தீர்க்க வந்திருக்கிறோம்.

வருமானம் முக்கியமல்ல

நாம் தமிழர் கட்சியை உருவாக்கி கடமையை செய்து வருகிறோம். எங்களுக்கு வருமானம் முக்கியமல்ல. தன்மானம் தான் முக்கியம். சேவைதான் வழியை தீர்மானிக்கிறது. தமிழ் நலத்தையும், வளத்தையும் காப்பது நமது கடமை.

தமிழகத்தில் 1½ கோடி இந்திகாரர்கள் குடியேறி விட்டனர். இந்தியை திணிக்கிறது என்று போராடுகிறோம். ஆனால் அவர்கள் இந்திக்காரர்களை திணித்து விட்டார்கள். இதை யாரும் கேட்கவில்லை. நாம் தான் கேட்கிறோம., தனி ஒருவராக கேட்போம்.

ஒருமுறை வாய்ப்பு தாருங்கள்

சிங்கம்போல் தனியாக களத்தில் நிற்கிறோம். எங்களுக்கு இந்த ஒரு முறை வாய்ப்பு தாருங்கள். இந்த மண்ணும், மக்களும் பயன்பெற வேண்டுமென தொலைநோக்கு பார்வையுடன் செயல்படுகிறோம். இந்த இனம் வாழ வேண்டும் என்பதே நாம் தமிழர் கட்சியின் நோக்கம். இது வரை ஆண்ட கட்சிகள் மணலை விற்கிறது. மலையை குடைந்து இருக்கிறது. இதனை தடுக்க முடியவில்லை. நாங்கள் அரசியல்வாதி அல்ல, லட்சியவாதிகள்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து அவர், ‘ஓட்டு போடும் பெண்களே ஒதுங்கி நிற்காதே. கண்ட கண்ட சின்னம் பார்த்து கலங்கி நிற்காதே. விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ என்று பாட்டுப்பாடி வாக்கு சேகரித்தார்.

Next Story