பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்


பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும்
x
தினத்தந்தி 30 March 2021 12:26 AM IST (Updated: 30 March 2021 12:26 AM IST)
t-max-icont-min-icon

பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என்று போடி பிரசாரத்தில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

தேனி:

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி மாவட்டத்தில் நேற்று சுற்றுப்பயணம் செய்து அ.ம.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். 

 போடி தேவர் சிலை முன்பு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் வாக்குசேகரித்து பேசியதாவது:-

நம்மோடு இருந்த கட்சியினர் நமக்கு துரோகம் செய்தார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழின துரோகிகள், தீய சக்தி என்று யார் சொன்னாங்களோ அங்கேயே சென்று வேட்பாளராக நிற்கிறார். 

இதற்கு போடி மக்கள் நல்ல தீர்ப்பு அளிக்க வேண்டும். 


தினகரன் ரொம்ப அவசரப்படுவார் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறார். 

நான் எப்போதும் நிதானமானவன். அதே நேரத்தில் வேகமானவன். அவசரக்காரன் அல்ல. 

போடி மக்களே தயவு செய்து சிந்தித்து பாருங்கள். நான் எம்.பி.யாக இருந்த போது இவர்கள் எல்லாம் எப்படி இருந்தார்கள் என்று உங்களுக்கு தெரியும்.
பண மூட்டைகளை நம்பி வாக்களிக்காதீர்கள். 

தீய சக்திகளை நம்பி வாக்களிக்காதீர்கள். உங்கள் உடைமைகளை எல்லாம் சூறையாடி விடுவார்கள். 

யார் நல்லவர் என்பது உங்களுக்கு தெரியும். நல்லவருக்கு வாக்களியுங்கள். காசு பணத்துக்கு ஏமாந்தீர்கள் என்றால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது.

பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டீர்கள் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும். 

அதுதான் உண்மை. எதுக்காக அவர்கள் பணம் கொடுக்கிறார்கள் என்று தயவுசெய்து எண்ணிப்பாருங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story