ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட், புதிய கல்வி கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்


ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட், புதிய கல்வி கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்
x
தினத்தந்தி 30 March 2021 1:20 AM IST (Updated: 30 March 2021 1:20 AM IST)
t-max-icont-min-icon

ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட், புதிய கல்வி கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும் கே.எஸ்.அழகிரி அறிக்கை.

சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நீட் தேர்வையும், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையையும் எதிர்த்து, தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன. இந்தநிலையில், பி.எஸ்சி. நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கையும் நீட் தேர்வின் மூலம் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது, தமிழகத்தக்கு மத்திய பா.ஜ.க. அரசு செய்யும் தொடர் துரோகமாக தெரிகிறது. சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு தேர்வு நடத்தினால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் எப்படி நீட் தேர்வை எதிர்கொள்ளமுடியும்?

தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும், மத்திய பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசால் கசக்கி பிழியப்படும் தமிழக மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரப்படும் என்பதையும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் மூலமே நீட் மற்றும் புதிய கல்வி கொள்கை பாதிப்புகளில் இருந்து தமிழக மாணவர்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story