தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: விஜயகாந்தை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள்


தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பு: விஜயகாந்தை பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள்
x
தினத்தந்தி 30 March 2021 10:12 PM GMT (Updated: 30 March 2021 10:12 PM GMT)

அருப்புக்கோட்டைக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று வந்தார். அவரை பார்த்த மகிழ்ச்சியில் தொண்டர்கள் திளைத்தனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் ரமேஷ் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த், அருப்புக்கோட்டையில் திருச்சுழி ரோட்டில் உள்ள மரக்கடை பஸ் நிலையம் அருகே நேற்று இரவு வாக்கு சேகரித்தார்.

வரவேற்பு

அப்போது அவர் வேனில் இருந்த படியே முரசு சின்னத்தை காண்பித்து மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

விஜயகாந்தை பார்த்த மகிழ்ச்சியில் திளைத்த தொண்டர்கள் ஆரவாரமிட்டு வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். சற்று நேரம் அங்கு நின்று தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் தொண்டர்களை நோக்கி கை காண்பித்துவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் சென்றார். 

Next Story