தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் வாக்கு


தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் வாக்கு
x
தினத்தந்தி 31 March 2021 10:30 AM IST (Updated: 31 March 2021 10:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் வாக்கு நடைபெற்று வருகிறது.

சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், தேர்தல் அமைதியாக நடைபெறவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. 

இதில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதற்காக போலீசாருடன், துணை ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக போலீசார் நியமிக்கப்பட்டு, அதற்கான ஆணை வழங்கப்பட்டது. 

மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதையொட்டி ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் போலீசார் தபால் வாக்கு செலுத்த தனி மையம் அமைக்கப்பட்டது. 

இந்நிலையில் சென்னையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு இன்று தபால் வாக்கு நடைபெற்று வருகிறது. சென்னையில் 16 மையங்களில் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

Next Story