தேர்தல் உறுதிமொழி ஏற்பு


தேர்தல் உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 31 March 2021 11:29 PM IST (Updated: 31 March 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் உறுதிமொழியை தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை டாக்டர்கள், பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆண்டிப்பட்டி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. 

இதில் தேனி மாவட்டத்திலும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 

இதை தொடர்ந்து 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தேனி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. 


இதற்கு கல்லூரி முதல்வர் டாக்டர் பாலாஜிநாதன் தலைமை தாங்கினார்.

 நிகழ்ச்சியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும், முக கவசம் அணிந்து சமூக இடைவெளி விட்டும் வாக்களிக்க வேண்டும். 

எனது வாக்கு, எனது உரிமை. எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என்று அவர்கள் உறுதிமொழி ஏற்றனர். 

இதில் பங்கேற்ற பணியாளர்கள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதி டி-சர்ட்டுகள் அணிந்திருந்தனர்.

 நிகழ்ச்சியில் மருத்துவகல்லூரி துணைத் தலைவர் டாக்டர் இளங்கோவன், கண்காணிப்பாளர், நிலைய மருத்துவர், பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story