தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும்
தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும் கனிமொழி எம்.பி. பேச்சு.
தேனி,
தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தேனி மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நேற்று தேர்தல் பிரசாரம் செய்தார். பெரியகுளம் காந்தி சிலை முன்பு, பெரியகுளம் (தனி) தொகுதி வேட்பாளர் சரவணக்குமார் எம்.எல்.ஏ.வை ஆதரித்து அவர் பேசியதாவது:-
சுயஉதவிக்குழுக்களுக்கு இந்த ஆட்சியில் மானியம், சுழல் நிதி கொடுப்பது இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முன்பு வழங்கப்பட்டது போல் சுழல்நிதி, மானியம் வழங்கப்படும். தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மகளிர் சுயஉதவி குழுவை போன்று, இளைஞர்கள் சுயஉதவி குழுக்கள் அமைக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வேண்டும், வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் அவர்களுக்கு கடன் மற்றும் மானியம் வழங்கப்படும்.தமிழக அரசு துறைகளில் 3 லட்சத்து 50 ஆயிரம் காலிப்பணியிடங்கள் உள்ளன. அவை அனைத்தும் தமிழகத்தில் உள்ள இளைஞர்கள், இளம்பெண்களை கொண்டு நிரப்பப்படும். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story