நாளை இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி


நாளை இரவு 7 மணிக்கு மேல், தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற வேண்டும்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
x
தினத்தந்தி 3 April 2021 1:32 PM IST (Updated: 3 April 2021 1:37 PM IST)
t-max-icont-min-icon

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) ஓய்கிறது.

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், இறுதிக் கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்த நிலையில், நாளை இரவு 7 மணிக்கு மேல் தொகுதிக்கு சம்பந்தம் இல்லதாவர்கள் வெளியேற வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.  

மேலும், தேர்தல் தொடர்பான ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்தவோ, பங்கேற்கவோ கூடாது.  நாளை இரவு 7 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் தேர்தல் பிரசாரம் செய்ய கூடாது. விதிமீறினால் 2 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்" என்று அறிவுறுத்தியுள்ளார். 

Next Story