மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி


மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் - மு.க ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 6 April 2021 8:39 AM IST (Updated: 6 April 2021 8:39 AM IST)
t-max-icont-min-icon

மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும் என வாக்களித்த பின்பு மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை,

தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

அதன்பின்னர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பொதுமக்கள் அமைதியாக ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  மே-2 ஆம் தேதி மக்கள் தீர்ப்பு சிறப்பாக இருக்கும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது” என்றார். 

Next Story