தமிழக சட்டசபை தேர்தல் : ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள் புகைப்பட தொகுப்பு
தமிழகம் முழுவது 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் வரிசையில் காத்திருந்து தங்களது வக்குகளை செலுத்தினர்.
சென்னை
தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தொடங்கியது வாக்குப்பதிவு. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் வந்து மு.க.ஸ்டாலின் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
திண்டிவனம் மரகதாம்பிகை பள்ளியில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வாக்கு செலுத்தினார்.
பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார். அவருடன் அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தும் தனது வாக்கை பதிவு செய்தார்.
தொண்டாமுத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சுகுனாபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மகள்கள் ஸ்ருதி, அக்சராவுடன் வந்து சென்னை உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
சென்னை வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட திருவான்மியூரில் நடிகர் அஜித் மனைவி ஷாலினியுடன் வந்துவாக்களித்தார்.
சென்னை விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.
சென்னை தி.நகரில் உள்ள வாக்குசாவடியில் தந்தை சிவக்குமாருடன் நடிகர்கள் சூர்யா, கார்த்தி வந்து வாக்களித்தனர்.
சிவகங்கை கண்டனூர் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தினார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.
சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வாக்களித்தார்
திருச்சி வெஸ்ட்ரி பள்ளியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வாக்களித்தார்.
கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி புதுப்பாளையம் அரசுப்பள்ளியில் வாக்களித்தார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்
திருச்சி : தில்லைநகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வாக்களித்தார்
Related Tags :
Next Story