12 மணி நிலவரம்: அசாம் 33.18%, மே.வங்காளம் 34.71 % வாக்குகள் பதிவு
தமிழகம் உள்பட 4 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநில சட்டமன்றங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அசாமில் 3-வது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. மேற்கு வங்காளத்தில் 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாமில் 40 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 234- தொகுதிகளுக்கும் கேரளாவில் 140 தொகுதிகளிலும் தேர்தல் நடந்து வருகிறது.
தேர்தல் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. நண்பகல் 12 மணி நிலவரப்படி அசாமில் 33.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்காளத்தில் 34.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் 31.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.அதேபோல், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 35.71 சதவீத வாக்குகள் நண்பகல் 12 மணி நிலவரப்படி பதிவாகியுள்ளன.
Related Tags :
Next Story