5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு: இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது.
கொல்கத்தா,
தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்குவங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது.
இதில் மேற்கு வங்காளம், அசாம் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாம் கட்டமும், தமிழகம், கேரளா, புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாகவும் வாக்குபதிவு நடைபெற்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடித்த வாக்களித்தனர்.
அதில் முதல் முறை வாக்காளர்கள், முதியவர்கள், பெண்கள் என பலதரப்பட்ட மக்கள் உற்சாகமாக வாக்களித்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய விஐபிகள் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே தங்கள் வாக்கை பதிவு செய்து வந்தனர்.
இந்நிலையில் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்காக 475 தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இன்று இரவு 7 மணியுடன் நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி, தமிழ்நாட்டில் 63.60 சதவீதமும், கேரளாவில் 69.93 சதவீதமும், மேற்கு வங்காளத்தில் 77.68 சதவீதமும், அசாமில் 78.94 சதவீதமும், புதுச்சேரியில் 77.90 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story