கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை


கொளத்தூர் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை: மு.க.ஸ்டாலின் முன்னிலை
x
தினத்தந்தி 2 May 2021 4:07 AM GMT (Updated: 2 May 2021 4:07 AM GMT)

தமிழக சட்டசபைதேர்தல் வாக்கு எண்ணிக்கை ஒரே நேரத்தில் தொடங்கியது. முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கி உள்ளது.

சென்னை

234 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
முதலில் தபால் வாக்குகளை எண்ணுவதற்காக தனி மேஜைகள் அமைப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து சுற்றுவாரியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தமிழகத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், முக்கியத் தொகுதிகளின் முன்னிலை நிலவரம். வருமாறு:-

* முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் கொளத்தூர்  திமுக  வேட்பாளர்  மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார்

* பூந்தமல்லி தொகுதி முதல் சுற்றில் திமுக முன்னிலை - வித்தியாசம் 2862

* செங்கல்பட்டு தொகுதி முதல் சுற்று நிலவரம்: திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1415

* திருத்தணி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது சுற்றில் திமுக வேட்பாளர் முன்னிலை - வித்தியாசம் 1520

Next Story