தமிழக சட்டமன்ற தேர்தல்: 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது 5 தொகுதிகளில் பா.ஜ.க. முன்னிலை வகித்து வருகிறது.
சென்னை,
தமிழகம், மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போதைய நிலவரப்படி 140 இடங்களில் திமுக கூட்டணியினர் முன்னிலையில் உள்ளனர். அதேபோல், 93 இடங்களில் அதிமுக கூட்டணியினரும் முன்னிலை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பங்கேற்றுள்ள பா.ஜ.க, தற்போது 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி தற்போது நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் துறைமுகம், தாராபுரம், உதகமண்டலம், நாகர்கோவில், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
துறைமுகம் - வினோஜ் பி.செல்வம் - 10338 (1,104 வாக்குகள் வித்தியாசம்)
தாராபுரம் - எல்.முருகன் - 15,186 (1,562 வாக்குகள் வித்தியாசம்)
உதகமண்டலம் - போஜராஜன் - 31,496 (2,613 வாக்குகள் வித்தியாசம்)
நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி - 30,643 (11,063 வாக்குகள் வித்தியாசம்)
திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன் - 25,971 (8,931 வாக்குகள் வித்தியாசம்)
Related Tags :
Next Story