கீழ்வேளூர் தொகுதியில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி


கீழ்வேளூர் தொகுதியில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் நாகை மாலி வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 9:58 AM GMT (Updated: 2 May 2021 9:58 AM GMT)

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி கீழ்வேளூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

நாகை,

தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 150 இடங்களிலும், அதிமுக 83 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.

அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் நாகை மாலி 67,988 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.

அந்த தொகுதியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை விட 16985 வாக்குகள் அதிகம் பெற்று, நாகை மாலி வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் 18 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

Next Story