மாநில செய்திகள்

சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் “ வெற்றி பெற்ற அமைச்சர்கள் மற்றும் தோல்வி அடைந்த அமைச்சர்கள்” முழு விவரம் + "||" + Assembly elections: Full details of AIADMK's "winning ministers and failed ministers"

சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் “ வெற்றி பெற்ற அமைச்சர்கள் மற்றும் தோல்வி அடைந்த அமைச்சர்கள்” முழு விவரம்

சட்டசபை தேர்தல்: அதிமுக சார்பில் “ வெற்றி பெற்ற அமைச்சர்கள் மற்றும் தோல்வி அடைந்த அமைச்சர்கள்” முழு விவரம்
சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட16 அமைச்சர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை,

அ.தி.மு.க., சார்பில், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், 27 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதில் அமைச்சர்கள் வளர்மதி, நிலோபர் கபில், பாஸ்கரன் ஆகியோருக்கு, வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

தேர்தலில் போட்டியிட்டவர்களில், முதல்வர், துணை முதல்வர் உட்பட, 16 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மற்றவர்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

தேர்தலில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:-

1. எடப்பாடி பழனிசாமி - எடப்பாடி தொகுதி 

2. ஓ.பன்னீர்செல்வம் - போடி நாயக்கனுார் தொகுதி

3. சீனிவாசன் - திண்டுக்கல் தொகுதி

4. செங்கோட்டையன் - கோபிசெட்டிபாளையம் தொகுதி

5. செல்லுார் ராஜு - மதுரை மேற்குதொகுதி

6. தங்கமணி - குமாரபாளையம் தொகுதி

7. வேலுமணி - தொண்டாமுத்துார் தொகுதி

8. அன்பழகன் - பாலக்கோடு தொகுதி

9. கருப்பணன் - பவானி தொகுதி

10. காமராஜ் - நன்னிலம் தொகுதி

11. ஓ.எஸ்.மணியன் - வேதாரண்யம் தொகுதி

12. உடுமலை ராதாகிருஷ்ணன் - உடுமலைப்பேட்டை தொகுதி

13. சி.விஜயபாஸ்கர் - விராலிமலை தொகுதி

14. கடம்பூர் ராஜு - கோவில்பட்டி தொகுதி

15. ஆர்.பி.உதயகுமார் - திருமங்கலம்தொகுதி

16. சேவூர் ராமச்சந்திரன் - ஆரணி தொகுதி

தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள் விவரம் பின்வருமாறு:-

1. சி.வி.சண்முகம் - விழுப்புரம் தொகுதி

2. கே.சி.வீரமணி - ஜோலார்பேட்டை தொகுதி

3. ஜெயகுமார் - ராயபுரம் தொகுதி

4. எம்.சி.சம்பத் - கடலுார் தொகுதி

5. நடராஜன் திருச்சி - கிழக்கு தொகுதி

6. ராஜேந்திர பாலாஜி - ராஜபாளையம் தொகுதி

7. பெஞ்சமின் - மதுரவாயல் தொகுதி

8. பாண்டியராஜன் - ஆவடி தொகுதி

9. ராஜலட்சுமி - சங்கரன்கோவில் தொகுதி

10. சரோஜா - ராசிபுரம் தொகுதி

11. எம்.ஆர்.விஜயபாஸ்கர் - கரூர் தொகுதி ஆகியோர் ஆவர்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டசபை தேர்தல்; மம்தா பானர்ஜி இன்று கோவா பயணம்
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கோவாவிற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி தொண்டர்களை சந்தித்து பேசுகிறார்.
2. 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தல்; 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்: யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேசத்தில் வரும் 2022ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 300 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என முதல் மந்திரி ஆதித்யநாத் கூறியுள்ளார்.