புதுச்சேரி மக்களுக்கு நன்றி... இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் - மத்திய அமைச்சர் அமித் ஷா


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 May 2021 3:01 AM GMT (Updated: 3 May 2021 3:01 AM GMT)

புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் 16 இடங்களிலும், காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி 8 இடங்களிலும், சுயேச்சைகள் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன்படி  4-வது முறையாக ரங்கசாமி முதல்-அமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில் புதுச்சேரி மக்களுக்கு நன்றி என்றும், புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி நிர்வாகம் சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும் என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இந்த எழில்மிகு மாநிலத்திற்கு சேவை செய்ய தே.ஜ.கூட்டணியை தேர்ந்தெடுத்த புதுச்சேரி மக்களுக்கு நன்றி. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடி மீதும், தே.ஜ.கூட்டணி வளர்ச்சி அரசியல் மீதும் உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. புதுச்சேரி இனி ஊழலற்ற, வளர்ச்சி சார்ந்த அரசுக்கு சாட்சியாக விளங்கும்”.

“இந்த அபார வெற்றிக்கு ஜே.பி.நட்டா, சாமிநாதன், மற்றும் புதுச்சேரி பா.ஜ.க.வின் அனைத்து நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்கள். பாஜகவின் ஒவ்வொரு நிர்வாகியும் புதுச்சேரியின் பெருமையை மீட்டெடுக்கவும், மாநில மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற பாடுபடுவார்கள்” என்று அமித் ஷா பதிவிட்டுள்ளார்.





Next Story