மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கு நன்றி - கமல்ஹாசன்
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடந்தது. இதையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்று ஆட்சி அரியணையைக் கைப்பற்றியுள்ளது.
இதனிடையே கோவைத்தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 51,481 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் 53,209 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
இந்நிலையில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள்”.
'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்” என்று கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். (1/2)
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2021
'சீரமைப்போம் தமிழகத்தை' என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம். (2/2)
— Kamal Haasan (@ikamalhaasan) May 2, 2021
Related Tags :
Next Story