தமிழக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி
சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்த நிலையில் தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார்.
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story