சீனாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா


சீனாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 8 Jun 2020 2:15 AM IST (Updated: 8 Jun 2020 1:22 AM IST)
t-max-icont-min-icon

சீனாவில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பீஜிங், 

சீனாவில் மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் 5 பேர் எந்தவித நோய் அறிகுறியும் இன்றி பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். புதிதாக அறிகுறியுடன் நோய்த்தொற்றுக்கு ஆளான 6 பேருடன் சேர்த்து நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83,036 ஆக உயர்ந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார ஆணையம் தெரிவித்து உள்ளது.

இதில் 70 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 78,332 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். இந்த வைரஸ் தொற்றால் சீனாவில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து 4,634 ஆக நீடிக்கிறது.

Next Story