உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்டவர் "அகதியாக வந்தவர் காதலியானார்"


உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்டவர் அகதியாக வந்தவர் காதலியானார்
x
தினத்தந்தி 23 May 2022 12:29 PM GMT (Updated: 2022-05-23T18:01:58+05:30)

உக்ரைன் அழகிக்காக மனைவியை கைவிட்ட பிரித்தானியர் விவகாரம் அந்த இளம்பெண் என்ன கூறியிருக்கிறார் பாருங்கள்

லண்டன்

இங்கிலாந்தில் ஒரு தம்பதியர் உக்ரைனிலிருந்து அகதியாக வந்த இளம்பெண் ஒருவருக்கு தங்கள் வீட்டில் இடமளித்து உள்ளன்ர்.இதனால் அவர்களுடைய பத்து ஆண்டுகால திருமண வாழ்வு பத்தே நாளில் முடிவுக்கு வந்தது.

ரஷியா போர் தொடுத்ததால் உக்ரைனிலிருந்து உயிர் தப்பி இங்கிலாந்திக்கு ஓடி வந்தார் சோபியா கர்கடிம்( 22) என்ற அழகான உக்ரைன் இளம்பெண். அவருக்கு பிராடுபோர்டில் வாழும் டோனி கார்நெட் ( 29), அவரது மனைவியான லோர்னா தம்பதி இரண்டு பிள்ளைகள் தங்கள் வீட்டில் அடைக்கலம் கொடுத்தார்கள்.

ஆனால், சோபியாவுக்கும் டோனிக்கும் காதல் பற்றிக்கொண்டது. லோர்னா தட்டிக்கேட்க, இதுதான் வாய்ப்பு என மனைவியையும் இரண்டு மகள்களையும் கைவிட்டு விட்டு, சோபியாவுடன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் டோனி.

இந்நிலையில், டோனி லோர்னா தம்பதியர் பிரிந்ததற்கு, தான் காரணம் அல்ல என்று கூறியுள்ளார் சோபியா. நான் லோர்னாவுடன் நீண்ட நேரம் செலவிட்டேன் என்று கூறும் சோபியா, ஆனால், அவர் இரட்டை வேடம் போடுபவர் என்று கூறியுள்ளார்.

எப்போது பார்த்தாலும் சந்தேகம், பதற்றம் என லோர்னா இருந்ததால்தான் , தானும் டோனியும் நெருக்கமானதாக தெரிவித்துள்ளார் சோபியா. எனக்கும் டோனிக்கும் இடையில் எதுவும் இல்லாதபோதே, ஏதோ இருப்பதாக லோர்னா கூறிக்கொண்டே இருந்தார். அது அவர் செய்த தவறு என்கிறார் அவர்.

இதற்கிடையில், நான் அவளுக்கு என் வீட்டில் இடமளித்தேன், ஆனால், அதற்கு பதிலாக அவள் இப்படி செய்வாள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அதனால் எவ்வளவு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பதைக் குறித்து அவள் கவலைப்படவேயில்லை என்கிறார் லோர்னா.

எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் இலாபம் என்னும் மன நிலை கொண்ட மக்கள் எங்கும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்கு பிரித்தானியர்கள் மட்டும் விதிவிலக்காகிவிடமுடியுமா என்ன!

உக்ரைன் போருக்குத் தப்பி அகதிகளாக அயர்லாந்துக்கு வந்துள்ள உக்ரைன் இளம்பெண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று கூறும் விளம்பரங்கள் இணையதளங்களில் உலாவரத்துவங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அகதிகளாக இங்கிலாந்து வந்துள்ள உக்ரைன் இளம்பெண்களை பாலியல் ரீதியில் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில் அவர்களுக்கு தங்கள் வீடுகளில் இடமளிக்க முன்வந்த பிரித்தானியர்கள் குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில், உங்கள் போர்க்கால கனவுகளை நிஜமாக்கிக்கொள்ளுங்கள் என்ற வாசகங்களுடன், உக்ரைனிலிருந்து அகதிகளாக வந்துள்ள இளம்பெண்களுடன் பாலுறவு கொள்ளலாம் என்று கூறி அயர்லாந்து இணையதளங்கள் சிலவற்றில் விளம்பரங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

உக்ரைன் இளம்பெண்கள் கிடைப்பார்கள் என்பது போன்ற விளம்பரங்கள் அயர்லாந்து இணையதளங்களில் 250 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும், பாலுறவுக்கு உக்ரைன் பெண்கள் கிடைப்பார்களா என இணையத்தில் தேடும் ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார் ஐரோப்பிய மனிதக் கடத்தலுக்கெதிரான நிபுணர் ஒருவர்.

ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பின் பிரதிநிதியான வாலியண்ட் ரிச்சி என்பவர் கூறும்போது, அயர்லாந்து பாலியல் சந்தை அகதிகள் பிரச்சினையை பயன்படுத்திக்கொள்வதைக் காணமுடிகிறது, உதாரணமாக அயர்லாந்தின் மிகப்பெரிய பாலியல் தொழிலாளிகள் இணையதளம், உக்ரைன் பெண்களுடன் உங்கள் போர்க்கால இன்பக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள் என விளம்பரம் செய்துள்ளது என்கிறார்.

உக்ரைன் போர்ச் சட்டப்படி அந்த நாட்டு ஆண்கள் அனைவரும் நாட்டைக் காக்க போராடவேண்டும் என்பதால், அகதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறுபவர்களில் பெரும்பான்மையோர் பெண்கள்தான்.

ஆனால், உக்ரைனில் பிரச்சினை என்றதும், ஐரோப்பா அதற்கு உடனடியாக ரியாக்ட் செய்த விதம், போருக்குத் தப்பியோடும் பெண்கள், பாலுறவுக்குக் கிடைப்பார்களா என ஆண்கள் தேடும் முயற்சியில் இறங்கியதுதான் என்கிறார் வாலியண்ட் ரிச்சி.


Next Story