சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் பலி


சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் பலி
x

கோப்புப்படம்

சூடான் கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியாகினர்.

கார்டூம்,

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவ ஆட்சி நடக்கிறது. அந்த நாட்டின் முன்னாள் ராணுவ தளபதியாக இருந்தவர் ஒகோனி ஓக்வோம் ஓதோ. கடந்த மே மாதம் அவர் பணியாற்றி வந்த போச்சலா நகரில் இருந்து வேறு இடத்துக்கு பணிமாறுதல் அளித்து ராணுவ அரசு உத்தரவிட்டது. இதனை விரும்பாத ராணுவ அதிகாரி ஓதோ தலைமறைவனார்.

இந்தநிலையில் போச்சலாவில் இருந்து கொண்டு ஆட்சிக்கு எதிராக படைகளை திரட்டுவதாக ஓதோ மீது புகார்கள் எழுந்தன. அதன்பேரில் ஓதோவை கைது செய்ய ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.

கைது நடவடிக்கையின் போது ஓதோவை போலீசார் சுட்டுக்கொன்றனர். இதனால் அங்குள்ள வாலிபர்கள் உள்பட பொதுமக்கள் ராணுவத்தின் நடவடிக்கையை கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். அதைத்தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்து கலவரமாக மாறியது.

கலவரத்தை ஒடுக்க ராணுவத்தினர் முயன்றனர். இந்த நடவடிக்கையில் அப்பாவி பொதுமக்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். இதுவரை பலர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக மாறியது.


Next Story