நைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் சாவு


நைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் சாவு
x
தினத்தந்தி 15 Jun 2023 4:31 AM GMT (Updated: 15 Jun 2023 4:36 AM GMT)

நைஜீரியாவில் திருமண கோஷ்டி சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து 103 பேர் உயிரிழந்தனர்.

அபுஜா,

நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் நடந்த திருமணத்துக்காக குவாரா மாகாணத்தில் இருந்து மணமக்களின் உறவினர்கள் சென்றிருந்தனர். திருமணம் முடிந்த பின்னர் தங்களது சொந்த ஊருக்கு 300-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அளவுக்கு அதிகமான பாரம் இருந்ததால் சுமை தாங்காத அந்த படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதனால் படகில் இருந்தவர்கள் தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் ஆற்றில் மூழ்கி சிறுவர்கள் உள்பட 103 பேர் பலியாகினர். மேலும் பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். எனவே பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


Next Story