கனடாவில் பஸ் மீது லாரி மோதி 15 பேர் உயிரிழப்பு.!


கனடாவில் பஸ் மீது லாரி மோதி 15 பேர் உயிரிழப்பு.!
x

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா,

கனடாவின் மனிடோபா மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை அருகே ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 25-க்கும் மேற்பட்ட முதியவர்கள் பயணம் செய்தனர். திடீரென இந்த பஸ் மீது எதிரே வந்த மினிலாரி வேகமாக மோதியது. இதில் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


Next Story