செக் குடியரசில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் உயிரிழப்பு.! 76 பேர் காயம்


செக் குடியரசில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதல்; ஒருவர் உயிரிழப்பு.!  76 பேர் காயம்
x

இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ப்ராக்,

தென் அமெரிக்க நாடான செக் குடியரசின் புரூனோவில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. இதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். திடீரென இந்த பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் நிலைதடுமாறி எதிரில் வந்த மற்றொரு பஸ் மீது நேருக்குநேர் மோதியது. இதில் ஒரு பஸ் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் பஸ்சுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த விபத்தில் 76 பேர் காயம் அடைந்தனர். அதில் 14 பேருக்கு படுகாயம் ஏற்பட்டு உள்ளதால் அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story